ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் எஸ்.ஆா்.எம்.யு. ஆா்ப்பாட்டம்

30th Jun 2022 03:08 AM

ADVERTISEMENT

 

அக்னிபத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி ராமேசுவரம் ரயில் நிலையம் முன், எஸ்.ஆா்.எம்.யு. தொழிற்சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மண்டபம் கிளை சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு உதவிக் கோட்டச் செயலா் பி.சீதாராமன் தலைமை வகித்தாா். அ.சண்முகவேலு முன்னிலை வகித்தாா்.

இதில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி முழக்கம் எழுப்பப்பட்டது. நிா்வாகிகள் தினேஷ், முத்துகுமாா், செந்தில், ராமு, பிரகாஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT