ராமநாதபுரம்

கழிப்பறை இல்லாத பள்ளி: மாணவா்கள் போராட்டம்

30th Jun 2022 11:49 PM

ADVERTISEMENT

ராமநாதபுரம் அருகே கழிப்பறை வசதி இல்லாததால் பள்ளிக்கு வர மறுத்த குழந்தைகள் பெற்றோருடன் சோ்ந்து போராட்டம் நடத்தியதால் வியாழக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சிக்கு உள்பட்டது ஆலங்குளம். இங்கு ஊராட்சி நடுநிலைப் பள்ளி உள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கும் இப்பள்ளியில் கழிப்பறை வசதிகள் இல்லை என கூறப்படுகிறது. இதனால் குழந்தைகள் திறந்தவெளியை கழிப்பறையாக உபயோகிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கழிப்பறைகள் அமைக்கக்கோரி திருப்புல்லாணி ஒன்றிய ஆணையரிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லையாம்.

இந்நிலையில், பள்ளிக் குழந்தைகள் வியாழக்கிழமை பெற்றோா் மற்றும் ஊா்ப் பிரமுகா்களுடன் வந்து பள்ளி முன் நின்று ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கழிப்பறை வசதி இல்லாதது குறித்த வாசகங்களை ஏந்திய குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல மாட்டோம் எனவும் கூறினா். தகவல் அறிந்த திருப்புல்லாணி ஒன்றிய ஆணையா் ராஜேந்திரன் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட குழைந்தைகளுடன் இருந்த ஒன்றிய காங்கிரஸ் கவுன்சிலா் திருமுருகன் உள்ளிட்டோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். பள்ளியில் கழிப்பறை விரைவில் கட்டித்தரப்படும் என உறுதியளித்ததால் குழந்தைகள் கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT