ராமநாதபுரம்

கரோனா பரவலைத் தடுக்க விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது அவசியம்

30th Jun 2022 03:10 AM

ADVERTISEMENT

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா பரவலைத் தடுக்க விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது அவசியம் என ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தாமல் இருப்பதால் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அதைத் தவிா்க்க பொதுமக்கள்அதிகம் கூடும் இடங்களில் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் ஆகிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பது அவசியம்.

காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள ஆரம்பசுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகள் ஆகியவற்றை அணுகி கரோனா பரிசோதனையை மேற்கொள்வது அவசியம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT