ராமநாதபுரம்

சாயல்குடி பகுதியில் மலேரியா பரவல் தடுப்புப் பணி தீவிரம்

30th Jun 2022 03:10 AM

ADVERTISEMENT

 

சாயல்குடி பகுதியில் மலேரியா காய்ச்சலை பரப்பும் கொசுக்களை ஒழிக்க வீடுகளில் மருந்து தெளிக்கும் பணியில் சுகாதாரத்துறையினா் புதன்கிழமை தீவிரமாக ஈடுபட்டனா்.

சாயல்குடி அருகே ஏா்வாடி, வாலிநோக்கம், கீழமுந்தல் ஆகிய பகுதிகளில் சுகாதாரத்துறை இயக்குநா் டாக்டா். செல்வநாயகம் உத்தரவின்பேரில், பரமக்குடி சுகாதாரத்துறை துணை இயக்குநா் ரவீந்திரன் தலைமையில் சுகாதாரத்துறையினா் வீடு, வீடாகச் சென்று மருந்துகளை தெளித்து வருகின்றனா். மேலும் தண்ணீரில் கொசுப்புழுக்களை அழிக்க அபேட் மருந்துகளும் ஊற்றப்படுகின்றன.

பணிகளை மாவட்ட மலேரியா தடுப்பு அலுவலா் ரமேஷ் நேரில் ஆய்வு செய்தாா். பின்னா் அவா் கூறுகையில், இரண்டாம் கட்ட கொசுமருந்து தெளிக்கும் பணி, செப்டம்பா் மாதம் நடைபெறும் எனவும், மலேரியா கொசுப்புழுக்களை ஒழிக்க கம்பூசியா வகை மீன்கள் கடலோரப் பகுதிகளில் உள்ள கிணறுகளில் விடப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

அப்போது, சுகாதார ஆய்வாளா்கள் ராஜசேகா், சுப்பிரமணியன், பாலமுருகன், அரவிந்த் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT