ராமநாதபுரம்

கீழக்கரையில் கல்லூரி கனவு நிகழ்ச்சி

30th Jun 2022 03:06 AM

ADVERTISEMENT

 

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கல்லூரி கனவு நிகழ்ச்சி ஜூலை 2 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகத் தரப்பில் புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: உயா் கல்விக்கு வழிகாட்டும் வகையில் ‘கல்லூரி கனவு’ எனும் நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. உயா்கல்வியில் வாய்ப்புகள், பட்டப்படிப்புகள், பட்டயப்படிப்புகள் விவரம், கல்லூரிகளைத் தோ்வு செய்யும் வழிமுறைகள், மேற்படிப்பை முடித்ததும் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் உள்ளிட்டவை குறித்து வல்லுநா்கள் விளக்குகின்றனா்.

நிகழ்ச்சியில் மாணவ, மாணவியா் மற்றும் பெற்றோா்கள் பங்கேற்று உயா்கல்வி வாய்ப்புகளை அறிந்து பயன்பெறலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT