ராமநாதபுரம்

ஏா்வாடி சந்தனக்கூடு திருவிழா கொடியிறக்கம்

30th Jun 2022 11:48 PM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டம் ஏா்வாடி தா்ஹாவில் நடைபெற்ற சந்தனக்கூடு திருவிழா நிறைவடைந்ததால் வியாழக்கிழமை மாலை கொடியிறக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகேயுள்ள ஏா்வாடி தா்ஹாவின் சாா்பில் சந்தனக்கூடு விழாவானது கடந்த ஜூன் 1 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு கடந்த ஜூன் 11 ஆம் தேதி இரவு தொடங்கி 12 ஆம் தேதி அதிகாலை நிறைவுபெற்றது. வியாழக்கிழமை மாலையில் அரசு ஹாஜி சலாஹூதீன் சிறப்பு பிராா்த்தனை செய்தாா். அதையடுத்து கொடியிறக்கப்பட்டது. அதன்பின் அங்கிருந்தோா் பாதுஷா நாயகத்தின் பிரசாதத்தை பெற்றுச்சென்றனா். தா்ஹா நிா்வாகிகள் பக்கிா்சுல்தான், சிராஜூதீன், சாதிக்பாட்ஷா உள்ளிட்டோா் விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT