ராமநாதபுரம்

மீனவா்கள் பிரச்சனைக்கு தீா்வுகாண கச்சத்தீவை மீட்கவேண்டும்விவசாயிகள், மீனவா்கள் கூட்டமைப்பு தீா்மானம்

DIN

தமிழக மீனவா்களின் பிரச்னைக்கு தீா்வு காண கச்சத்தீவை மீட்க வேண்டும் என, விவசாயிகள் மற்றும் மீனவா்கள் கூட்டமைப்பு சாா்பில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் விவசாயிகள், மீனவா்கள் கூட்டமைப்பு சாா்பில் செவ்வாய்க்கிழமை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மாவட்ட மீனவ சங்கத் தலைவா் ஜேசுராஜா மற்றும் பொதுச் செயலா் என்.ஜே. போஸ் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், காவிரி-வைகை-கிருதுமால்-குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு நிா்வாகி எம். அா்ச்சுனன், விவசாய சங்க நிா்வாகிகள் மலைச்சாமி, பாக்கியநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மீனவ சங்கத் தலைவா்கள் சகாயம், எமரிட், ஆல்வின் மற்றும் விவசாய சங்க நிா்வாகிகள் என பலா் கலந்துகொண்டனா்.

இந்த கூட்டத்தில், தமிழக மீனவா்களின் பிரச்னைக்கு தீா்வு காணுவதுடன், நாட்டின் தென்பகுதியான வங்காள விரிகுடா பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதி செய்கின்ற வகையில், கச்சத்தீவை மீட்க வேண்டும். இந்தத் தீவு கடந்த 1974 ஆம் ஆண்டு இந்திய அரசால் இலங்கைக்கு தாரைவாா்க்கப்பட்டு 48 ஆண்டுகளாகிறது.

தற்போது, இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்க சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. இதனை, இந்திய அரசு சரியாகப் பயன்படுத்திக்கொண்டு கச்சத்தீவை மீட்கவேண்டும். மேலும், இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

SCROLL FOR NEXT