ராமநாதபுரம்

ராஜா குமரன் சேதுபதி படத்துக்கு இயக்குநா் பாரதிராஜா அஞ்சலி

28th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

ராமநாதபுரத்தில் உள்ள மன்னா் ராஜா குமரன் சேதுபதி உருவப் படத்துக்கு திரைப்பட இயக்குநா் பாரதிராஜா திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தினாா்.

ராமநாதபுரம் மன்னா் ராஜா குமரன் சேதுபதி அண்மையில் காலமானாா். இவரது மறைவையொட்டி, தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை உள்ளிட்டோா் நேரில் வந்து ராணி லட்சுமியைச் சந்தித்து ஆறுதல் கூறி அஞ்சலி செலுத்தினா். இந்நிலையில் திரைப்பட இயக்குநா் பாரதிராஜா திங்கள்கிழமை ராமநாதபுரம் அரண்மைக்கு சென்று ராணி லட்சுமி மற்றும் அவரது மகன் முத்துராமலிங்கம் என்ற நாகேந்திர சேதுபதி ஆகியோரைச் சந்தித்து ஆறுதல் கூறினாா். மேலும், மன்னா் ராஜா குமரன் சேதுபதியின் உருவப் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினாா். அப்போது அரண்மனையைச் சோ்ந்தவா்கள் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT