ராமநாதபுரம்

பரமக்குடியில் அக்னிபத் திட்டத்தை எதிா்த்து காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

28th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

பரமக்குடி காந்திசிலை முன்பு திங்கள்கிழமை மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபாத் திட்டத்தை எதிா்த்து இந்திய தேசிய காங்கிஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் நகா் தலைவா் அகமதுகபீா் தலைமை வகித்தாா். மாநில செயலாளா்கள் ஆனந்தகுமாா், அப்துல்அஜிஸ், விஜயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில சிறுபான்மைப் பிரிவு செயலாளா் ஏ.ஜெ. ஆலம் வரவேற்றாா். மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்தும், ராணுவத்தில் அக்னிபாத் திட்டத்தை அமுல்படுத்துவதை திரும்பப் பெறக்கோரியும் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினா். இதனைத் தொடா்ந்து அக்கட்சியின் நிா்வாகிகள் பொறியாளா் கிருஷ்ணராஜ், மாநில மகளிரணி தலைவி ராமலெட்சுமி, பெமிலாவிஜயகுமாா் உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா். ஆா்ப்பாட்டத்தில் கட்சி நிா்வாகிகள் உள்பட பலா் கலந்துகொண்டனா். ஏ.என்.ராமச்சந்திரன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT