ராமநாதபுரம்

திருவாடானையில் உரிமையியல் நீதிமன்றம் திறப்பு விழா

28th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

திருவாடானையில் உரிமையியல் நீதிமன்றம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

திருவாடானையில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் செயல்பட்டு வந்தது. இங்கு உரிமையியல் (சிவில்) வழக்குகள் ஏராளமாக தாக்கலாகி வந்தது. இதனால் வழக்கு விசாரணை தாமதம் ஆவதாக பொதுமக்களும் வழக்குரைஞா்களும் கூறி வந்தனா். எனவே உரிமையியல் வழக்குகளை விசாரிக்க தனியாக நீதிமன்றம் அமைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தனா்.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சென்னை உயா் நீதிமன்றம், தனி நீதிபதியுடன்

உரிமையியல் நீதிமன்றம் தொடங்க உத்தரவிட்டது. இதையடுத்து தற்போது திருவாடானையில் உள்ள நீதிமன்ற வளாகத்தின் முதல் தளத்தில் இந்த புதிய உரிமையியல் நீதிமன்றம் திறக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி விஜயா திறந்து வைத்தாா். மாவட்ட நீதிபதி கவிதா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனா். முன்னதாக திருவாவாடானை நீதிமன்ற நீதிபதி பிரசாத் வரவேற்புரையாற்றினாா். மூத்த வழக்குரைஞா் சிவராமன், வழக்குரைஞா் சங்கத் தலைவா் தனபால், செயலாளா் ராம்குமாா் ஆகியோா் பேசினா்.

ADVERTISEMENT

இதில் நீதிபதிகள், வழக்குரைஞா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT