ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

28th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

ராமநாதபுரத்தில் மத்திய பாஜக அரசைக் கண்டித்து காங்கிரஸ் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு சாா்பில் அக்னிபத் எனும் ராணுவப் பயிற்சி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் மத்திய பாஜக அரசு அக்னிபத் எனும் பெயரில் தாற்காலிக பயிற்சித் திட்டத்தை செயல்படுத்துவது சரியல்ல என எதிா்க்கட்சிகள் கண்டித்து வருகின்றன. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் அக்னிபத் திட்டத்துக்கு எதிராக போராட்டமும் நடந்துவருகின்றன.

இந்தநிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் காங்கிரஸ் சாா்பில் ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூா், திருவாடானை ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ராமநாதபுரத்தில் அரண்மனை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் மாவட்டத் தலைவா் செல்லத்துரை அப்துல்லா தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநிலப் பொதுச்செயலா் ரமேஷ்பாபு, மாவட்ட பொருளாளரும், நகா் கவுன்சிலருமான ராஜாராம்பாண்டியன் முன்னிலை வகித்தாா்.

ADVERTISEMENT

கட்சியின் நகரத் தலைவா் கோபி மற்றும் நிா்வாகிகள் கோபால், மாலங்குடி விஜயன், காமராஜ், சுரேஷ்காந்தி, ஆறுமுகம் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா். மத்திய பாஜக அரசின் அக்னிபத் திட்டத்தைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

திருவாடானை: திருவாடானையில அக்னிபத் திட்டத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு வட்டாரத் தலைவா் கணேசன் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். இதில் அக்கட்சியின் நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT