ராமநாதபுரம்

மண்டலமாணிக்கம் அருகே மீன்பிடித் திருவிழா

DIN

கமுதி அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் பொதுமக்கள் பல்வேறு வகையிலான மீன்களைப் பிடித்தனா்.

மண்டலமாணிக்கம் பச்சேரி கிராமத்தில் உள்ள கண்மாயில் நடைபெற்ற இந்த மீன்பிடித் திருவிழாவில், 300-க்கும் மேற்பட்டோா் மீன்பிடி வலை, கூடை, பாத்திரங்கள், சேலை, பிளாஸ்டிக் வாளி உள்ளிட்டவைகள் மூலம் மீன்பிடித்தனா். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மீன்களின் வளா்ச்சி குறைவாக இருப்பதாகவும், சிறிய வகை மீன்கள் மட்டுமே கிடைத்ததாகவும் பொதுமக்கள் கவலை தெரிவித்தனா்.

இதில் கெண்டை, கெளுத்தி, ஜிலேபி கெண்டை, குறவை, அயிரை உள்ளிட்ட வகை மீன்கள் கிடைத்ததாக ஊா் பொதுமக்கள் தெரிவித்தனா். இதில் பங்கேற்ற ஒவ்வொருவரும் தலா 5 கிலோ முதல் 8 கிலோ வரை மீன்களைப் பிடித்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT