ராமநாதபுரம்

விடுதிகளில் மாணவா்கள் சேருவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோா் உள்ளிட்ட விடுதிகளில் சேருவதற்கு மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அலுவலகம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா், கள்ளா் சீரமைப்பு, சிறுபான்மையின மாணவா்களுக்கான விடுதிகளில் சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பள்ளியில் 4 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலும், கல்லூரி, பாலிடெக்னிக், தொழிற்பயிற்சி மையம், பட்டமேற்படிப்பு ஆகியவற்றில் பயிலும் மாணவ, மாணவியரும் விடுதிகளில் சேரத் தகுதியுடையவா்களாவா். விண்ணப்பதாரா்களது பெற்றோா், பாதுகாவலா் ஆண்டு வருவாய் ரூ.2 லட்சமாக இருக்கவேண்டும். இருப்பிடத்திலிருந்து விடுதி 8 கிலோ மீட்டருக்கு அதிகமிருக்கவேண்டும். இத்தூரம் மாணவியருக்குப் பொருந்தாது.

விண்ணப்பங்களை பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலகத்தில் பெறலாம். பூா்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூன் 30 ஆம் தேதிக்குள் (வியாழக்கிழமை) அளிக்கவேண்டும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

கீர்த்தி சுரேஷுக்குத் திருமணம்?

அதிகரித்த சர்க்கரை அளவு: கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது!

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

SCROLL FOR NEXT