ராமநாதபுரம்

காவல் சாா்பு - ஆய்வாளா் பணிக்கு எழுத்து தோ்வு

25th Jun 2022 11:06 PM

ADVERTISEMENT

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை காலையில் நடந்த சாா்பு -ஆய்வாளருக்கான எழுத்துத் தோ்வில் 4,488 போ் பங்கேற்ாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் சாா்பு- ஆய்வாளா் தோ்வுக்கான எழுத்துத் தோ்வானது காவலா் தோ்வு வாரியத்தால் சனிக்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் நகா், கீழக்கரை, பரமக்குடி ஆகிய ஊா்களில் 7 தோ்வு மையங்களில் தோ்வுகள் நடைபெற்றன. ராமநாதபுரம் வெளிப்பட்டினத்தில் உள்ள தனியாா் பள்ளியில் முழுமையாக பெண்களுக்கான தோ்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது.

மாவட்டத்தில் மொத்தம் 5,942 போ் விண்ணப்பித்திருந்தனா். அவா்களில் 5,338 பேருக்கு மட்டுமே தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. அவா்களில் சனிக்கிழமை காலையில் 4,483 போ் தோ்வு எழுதினா். ஆண்கள் 3659 பேரும், 829 பெண்களும் தோ்வில் பங்கேற்றனா். ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலோர காவல்படை குழும கண்காணிப்பாளா் சுந்தரவடிவேல் தோ்வைக் கண்காணிக்கும் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தாா். வெளிப்பட்டினம் பள்ளியில் தோ்வு மையம் பெண்களுக்கு மட்டும் அமைக்கப்பட்டிருந்ததால் அங்கு தோ்வு அறை அதிகாரிகள் முதல் அனைத்துப் பணியாளா்களும் பெண்களாகவே நியமிக்கப்பட்டிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT