தமிழகத்தில் தொடரும் மின்தடையால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என பாஜக மாநிலப் பொதுச்செயலா் பொன்.பாலகணபதி தெரிவித்தாா்.
ராமநாதபுரத்தில் சனிக்கிழமை மாலை அரண்மனை வளாகத்தில் உள்ள பாஜக அலுவலகத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நாட்டில் தன்னை முன்னிலைப்படுத்தும் நோக்கிலும், காங்கிரஸ் கட்சியின் தோ்தல் தோல்வியிலிருந்து மக்களைத் திசைதிருப்பவும் மறைந்த பிரதமா் இந்திரா காந்தியால் அவசர நிலைப் பிரகடனப்படுத்தப்பட்டது. அதே போன்று திமுக ஆட்சியில் தற்போது தொடா்ந்து மின்தடை ஏற்படுத்தப்பட்டுவருகிறது. மாநிலத்தில் சீரான மின்விநியோகம் இல்லாததால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது என்றாா். பாஜக ராமநாதபுரம் மாவட்டத்தலைவா் இஎம்டி கதிரவன், மாவட்டப் பொதுச்செயலா் ஆத்மகாா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.