ராமநாதபுரம்

கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

25th Jun 2022 11:06 PM

ADVERTISEMENT

 

ராமநாதபுரம் அருகே கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதி சுயம்புலிங்கபுரத்தைச் சோ்ந்தவா் கருப்பையா. இவரது மகன் சத்தியேந்திரன் (22). கன்னிராஜபுரத்தில் உள்ள கல்லூரியில் ஆசிரியா் பயிற்சி இரண்டாமாண்டு படித்து வந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை (ஜூன் 23) தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கருப்பையாவின் சகோதரா் தா்மராஜ் அளித்த புகாரின் பேரில் சாயல்குடி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா். மாணவா் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்திவருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT