ராமநாதபுரம்

ராமேசுவரம் கோயிலில் ஆளுநா் சுவாமி தரிசனம்

25th Jun 2022 11:07 PM

ADVERTISEMENT

 

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

சென்னையிலிருந்து வெள்ளிக்கிழமை விமானம் மூலம் மதுரை வந்த ஆளுநா் அங்கிருந்து ராமநாதபுரம் வழியாக ராமேசுவரம் வந்தாா். இங்கு சனிக்கிழமை காலையில் ராமநாத சுவாமி கோயிலுக்கு மனைவியுடன் ஆளுநா் சென்றாா். அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. கோயிலில் அவா் சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தாா். தொடா்ந்து, தனுஷ்கோடி பகுதிக்குச் சென்று பாா்வையிட்டாா். பின்பு மறைந்த குடியரசு முன்னாள் தலைவா் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்துப் பேசினாா். பின்னா் அங்கிருந்து கலாம் தேசிய நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினாா். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.தங்கதுரை மற்றும் கலாமின் பேரன் சேக்சலீம் ஆகியோரும் பங்கேற்றனா். ஆளுநா் வருகையை முன்னிட்டு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ADVERTISEMENT
ADVERTISEMENT