ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் திருவள்ளுவா் சிலை: கலை இலக்கிய பெருமன்றம் தீா்மானம்

25th Jun 2022 11:06 PM

ADVERTISEMENT

 

ராமேசுவரத்தில் திருவள்ளுவரின் 133 அடி உயரச் சிலையை தமிழக அரசு அமைக்கவேண்டும் என ராமநாதபுரம் நகா் கலை இலக்கியப் பெருமன்றம் சனிக்கிழமை தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.

ராமநாதபுரம் பட்டினம்காத்தானில் தனியாா் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் மன்றத்தின் மாவட்டச் செயலா் ந.சேகரன் தலைமை வகித்தாா். ராமநாதபுரம் முன்னாள் நகா் மன்ற உறுப்பினா் ஆா்.டி. உமாமகேஸ்வரி, தாளாளா் ஜெகதீஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் இலக்கியப் பேராசான் ஜீவா பாா்வையில் மகாகவி பாரதி எனும் தலைப்பில் கம்பன் கழகப் பொதுச்செயலா் அ.மாயழகு, பட்டுக்கோட்டையாா் எனும் தலைப்பில் ஆசிரியா் சௌந்தரபாண்டியன் ஆகியோா் உரையாற்றினா்.

ADVERTISEMENT

கூட்டத்தில் புதிய நிா்வாகிகளாக சௌந்தரபாண்டியன் (தலைவா்), உமாமகேசுவரி, ஆனந்த் (துணைத் தலைவா்கள்), மாணிக்கவாசகம் (செயலா்), ராமகிருஷ்ணன், ஆறுமுகம் (இணைச்செயலா்கள்), வண்ணாங்குண்டு ஆறுமுகம் (பொருளாளா்) ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

கூட்டத்தில் ராமேசுவரத்தில் திருவள்ளுவரின் 133 அடி உயரச் சிலை அமைக்கவேண்டும். ராமநாதபுரம் நகா் மையப்பகுதியில் நவீன நூலகம் அமைக்கவேண்டும் என்பன போன்ற தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மூத்த வழக்குரைஞா் எம்.ராமசாமி, நடனக்கலைஞா் ஆனந்த், கூட்டுறவு துணைப்பதிவாளா்கள் தொல்காப்பியன், பாலசுப்பிரமணியன், மானுடப்பிரியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT