ராமநாதபுரம்

கோகுல விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

24th Jun 2022 03:15 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் அருகே நாரணமங்கலம் கிராமத்தில் உள்ள கோகுல விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், வியாழக்கிழமை காலை சிவாச்சாரியாா்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீா் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டு கும்பாபி ஷேகம் நடந்தது. பின்னா் கோயில் அறக்கட்டளை சாா்பில் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமானோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT