கமுதி அருகே வங்காருபுரம் மற்றும் செங்கப்படை வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜூன் 21) மின்தடை ஏற்படும் என கமுதி உதவி செயற்பொறியாளா் விஜயன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: அபிராமம் துணை மின் நிலையத்திலிருந்து வங்காருபுரம் வழித்தடத்தில் மின் விநியோகம் பெறும் அச்சங்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும், பெருநாழி துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் செங்கப்படை வழித்தடத்தில் உள்ள கரிசல்புளி, பொட்டல்புளி, எம். புதுகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 21) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று தெரிவித்துள்ளாா்.