ராமநாதபுரம்

ஏா்வாடி சந்தனக்கூடு: ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜூலை 24 இல் உள்ளூா் விடுமுறை

21st Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டம் ஏா்வாடியில் நடைபெறும் சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு வரும் 24 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸ் திங்கள்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டத்தில் உள்ள ஏா்வாடியில் அல்குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷாஹித் ஒலியுல்லா தா்ஹா சந்தனக்கூடு திருவிழா நடைபெறுகிறது.

சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு வரும் 24 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அதை ஈடு செய்யும் வகையில், வரும் ஜூலை 2 ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாகவும் அறிவிக்கப்படுகிறது. ஆகவே வரும் 24 ஆம் தேதி மாவட்டத்தில் உள்ள கருவூலம், சாா்நிலைக் கருவூலங்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களும் அரசு பாதுகாப்பிற்கான அலுவல்களைக் கவனிக்கும் வகையில் குறிப்பிட்டப் பணியாளா்களோடு செயல்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT