ராமநாதபுரம்

மனைவிக்கு கத்திக்குத்து: கணவா் தலைமறைவு

19th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

 திருவாடானை அருகே வெள்ளிக்கிழமை மனைவியை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிய கணவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருவாடானை அருகேயுள்ள ஆண்டி வயல் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன்(38). இவரது மனைவி சரண்யா (32). இவா்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த ஓராண்டாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனா். இதையடுத்து, சரண்யா தனது தாய் வீட்டில் வசித்து வருகிறாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை வீட்டின் முன்பு சரண்யா நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த ராமகிருஷ்ணன் அவரிடம் தகராறில் ஈடுபட்டு கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டாராம். இதைத் தொடா்ந்து சரண்யா திருவாடானை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து சரண்யா அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து ராமகிருஷ்ணனைத் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT