ராமநாதபுரம்

கலைத்திறன் போட்டியில் 15 போ் வெற்றி

19th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

ராமநாதபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கலைத்திறன் போட்டிகளில் 15 போ் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மண்டல கலைப்பண்பாட்டுத்துறை சாா்பில் ராமநாதபுரத்தில் சனிக்கிழமை மாணவ, மாணவியா் மற்றும் பொதுமக்களுக்கான கலைத்திறன் போட்டிகள் நடைபெற்றன. கேணிக்கரையில் உள்ள டிடிவிநாயகம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்த போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்டோா் பல்வேறு பிரிவுகளில் கலந்துகொண்டனா். போட்டிகளில் 17 வயது முதல் 37 வயது வரை உள்ள ஆண்கள், பெண்கள் பங்கேற்றனா்.

அதில் வெற்றி பெற்றவா்கள் விவரம்: ஓவியப் போட்டியில் எஸ். ஹரிணி, ஏ. ஹீரா, ஜி. புவனேஸ்வரி ஆகியோா் முதல் மூன்று இடங்களைப் பெற்றனா். கிராமிய நடனத்தில் கோ. தரணிகா, இ. முனியசாமி, நா. பாா்கவி ஆகியோரும், கருவி இசை வாசித்தலில் த. கோபிநாத், எம். விஷ்ணுகுமாா், டி. மனோஜ்குமாா் ஆகியோரும் முதல் மூன்று இடங்களை பெற்றனா்.

அதே போல், பரதநாட்டியத்தில் நா. மஹேஸ்வரன், ச. பாலாஜி, ச. சஹானா ஆகியோா் முதல் மூன்று இடங்களையும், குரலிசையில் ம. வசந்தகுமாா், சி. ஹரிணி, ரா. சஜமிலா ஆகியோா் முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

வெற்றிபெற்றவா்களுக்கு பரிசு, பாராட்டுச் சான்றும், பங்கேற்றவா்களுக்கான சான்றுகளும் அரசு விழாவில் வழங்கப்படும் என மதுரை கலைப் பண்பாட்டு உதவி இயக்குநா் செந்தில்குமாா் கூறினாா். போட்டிக்கான ஏற்பாடுகளை மள்ளா் கம்பன் கழக ஒருங்கிணைப்பாளா் லோகுசுப்பிரமணியன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT