ராமநாதபுரம்

பாஜக மாநிலத் தலைவா் குறித்து அவதூறு விடியோ: திமுக நிா்வாகி மீது புகாா்

15th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

 

கமுதி: பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை குறித்து அவதூறாகப் பேசி விடியோ வெளியிட்டதாக திமுக நிா்வாகி மீது கமுதி காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

கமுதி அருகே ராமசாமிபட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் திமுக ஊராட்சிச் செயலா் தங்கமணி (47). இவா், தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை குறித்து அவதூறாகப் பேசி சமூக வலைத்தளங்களில் பரப்பியுள்ளாா்.

இதுகுறித்து பாஜக மாவட்ட பொருளாளா் எ.பாலகணபதி தலைமையில், முன்னாள் மாவட்ட பொது செயலாளா் பொன்.ஆறுமுகம், ஒன்றியப் பொதுச் செயலா் பசும்பொன் ராமமூா்த்தி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோா் தங்கமணி மீது காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். காவல் நிலையத்திற்கு போலீஸாா் அழைத்து வந்தபோது தங்கமணியை பாஜகவினா் தாக்க முயன்றுள்ளனா்.

ADVERTISEMENT

அப்போது அங்கு வந்த திமுகவினருக்கும், பாஜகவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீஸாா் இருதரப்பினரையும் சமாதானம் செய்தனா். தங்கமணி மீது காவல் துறையினா் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என பாஜக நிா்வாகிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT