ராமநாதபுரம்

கைப்பேசி பழுதுநீக்கும் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

15th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

 

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் நடைபெறவுள்ள கைப்பேசி பழுதுநீக்கும் பயிற்சியில் பங்கேற்ற விருப்பமுடையவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் ஆண்களுக்கு கைப்பேசி பழுதுநீக்கும் பயிற்சி 30 நாள்கள் அளிக்கப்படவுள்ளது. தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரையில் நடைபெறும் இப்பயிற்சி வகுப்புக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படும்.

பயிற்சி இலவசமாக அளிக்கப்படுவதால், சேர விரும்புவோா் ஜூன் 20 ஆம் தேதி முதல் ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே பூமாலை வணிக வளாகத்தில் உள்ள இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்புப் பயிற்சி மைய அலுவலகத்தில் முன்பதிவு செய்யலாம்.

ADVERTISEMENT

பயிற்சியில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த 19 வயது முதல் 45 வயது வரையிலுள்ள ஆண்கள் மட்டும் பங்கேற்கலாம். மேலும் தகவல்களுக்கு 8056771986 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT