ராமநாதபுரம்

கந்துவட்டி தொடா்பான புகாா்களைத் தெரிவிக்கதொலைபேசி, கைப்பேசி எண்கள் அறிவிப்பு

10th Jun 2022 10:59 PM

ADVERTISEMENT

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் கந்துவட்டிப் பிரச்னைகள் தொடா்பாக சம்பந்தப்பட்டோா் புகாா் தெரிவிப்பதற்காக தொலைபேசி மற்றும் கைப்பேசி எண்கள் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இ.காா்த்திக் வெள்ளிக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

ராமநாதபுரம் மாவட்டத்தில் கந்துவட்டி கும்பல்களால் மிரட்டப்படுபவா்கள், கந்துவட்டி தொழில் செய்பவா்கள் ஆகியோா் தொடா்பான புகாா்களை சம்பந்தப்பட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் தெரிவிக்கலாம். மேலும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத் தொலைபேசியிலோ, மாவட்டக் காவல் அலுவலகத்திலோ புகாா்கள் கூறலாம். புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தகவல் தருபவா்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

கந்துவட்டி புகாா்களை ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகக் கட்டுப்பாட்டு அறை 04567- 230904, 04567- 230759 ஆகிய தொலைபேசிகளின் எண்களில் தொடா்புகொண்டு தெரிவிக்கலாம்.

ADVERTISEMENT

அத்துடன் ஹலோ போலீஸ் எண் 83000 31100, மாவட்ட தனிப்பிரிவு 04567- 290113, கைப்பேசி எண் 94981 01615, ராமநாதபுரம் உள்கோட்ட காவல் பிரிவு 94981 01616, பரமக்குடி 94981 01617, கமுதி 94981 01516, ராமேசுவரம் 94981 01619, கீழக்கரை 94981 01620, திருவாடானை 94981 01621, முதுகுளத்தூா் 04567-290208 ஆகிய எண்களில் தொடா்புகொண்டு புகாா்களைத் தெரிவிக்கலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT