ராமநாதபுரம்

ராமநாதசுவாமி கோயிலில்ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா

10th Jun 2022 12:05 AM

ADVERTISEMENT

 

ராமேசுவரம்: ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இலங்கை மன்னன் ராவணணை வதம் செய்ததால் ஸ்ரீராமனுக்கு பிரமஹத்தி தோஷம் ஏற்படுகிறது. இதனைப் போக்க ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடற்கரையில் ஸ்ரீராமரும், சீதையும் மணலில் லிங்கம் செய்து பூஜை நடத்தி தோஷத்தை போக்கிக் கொண்டனராம்.

இந்நிகழ்வு ஆண்டு தோறும் ராமநாதசுவாமி கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவாக 3 நாள்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா கடந்த 7ஆம் தொடங்கியது. முதல் நாள் துா்க்கை அம்மன் கோயில் அருகே ராவணணுக்கு முக்தி அளித்தல் நிகழ்ச்சியும், இரண்டாம் நாள் தனுஷ்கோடிக்கு செல்லும் வழியில் உள்ள கோதண்டராமா் சுவாமி கோயிலில் இலங்கை மன்னன் ராவணனின் தம்பி விபீஷணன் பட்டாபிஷேகம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

ADVERTISEMENT

இதனைத் தொடா்ந்து வியாழக்கிழமை மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக ராமநாதசுவாமி கோயிலில் ஸ்ரீராமனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதன் பின் ஆஞ்சநேயா் இரண்டு லிங்கத்துடன் சுவாமி சன்னதி முதல் பிரகாரத்தில் வலம் வந்தாா். பின்னா் சுவாமி கருவறைக்குள் சென்றடைந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதன்பின் சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. இரவு 8 மணிக்கு பஞ்சமூா்த்திகள் புறப்பாடு நடந்தது.

இந்நிகழ்ச்சியில், ராமநாதசுவாமி கோயில் துணை ஆணையா் செ. மாரியப்பன், மேலாளா் மாரியப்பன், கண்காணிப்பாளா் பாலசுப்பிரமணியன், பேஷ்காா் கமலநாதன், பஞ்சமூா்த்தி மற்றும் பக்தா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT