ராமநாதபுரம்

மண்டலமாணிக்கம் பெருமாள் கோயில்,கே. பாப்பாங்குளம் தா்மமுனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

10th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

 

கமுதி: மண்டலமாணிக்கம் பெருமாள் கோயில், கே. பாப்பாங்குளம் தா்மமுனீஸ்வரா், அங்காளஈஸ்வரி, அரியநாச்சி அம்மன் உள்ளிட்ட கோயில்களில் வியாழக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே மண்டலமாணிக்கம் பூமிநீளா சமேத வெங்கடாசலபதி பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி புதன்கிழமை மூன்றுகால பூஜைகள், வியாழக்கிழமை கடம் கும்பம் புறப்பாடு, கோயில் கலசங்களுக்கு புனித நீா் ஊற்றி கும்பாபிஷேக விழா ஆகியவை நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை மண்டலமாணிக்கம் பெருமாள் கோயில் திருப்பணிக்குழுவினா் செய்திருந்தனா்.

அதேபோல் கே. பாப்பாங்குளம் கிராமத்தில் தா்மமுனீஸ்வரா், அங்காளஈஸ்வரி, அரியநாச்சி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழாவையொட்டி 108 பால்குடங்கள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, மூலவா் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக காலையில் மகா கணபதி ஹோமம், யாகசாலை பூஜை, பூா்ணாஹூதி, கோ பூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.

ADVERTISEMENT

அதனைத் தொடா்ந்து கும்பம், கடம் புறப்பாடு, சிவாச்சாரியாா்கள், வேத மந்திரங்கள் முழங்க, இசை வாத்தியங்களுடன் புறப்பட்டனா். பின்னா் தா்மமுனீஸ்வரா், அங்காளஈஸ்வரி, அரியநாச்சி அம்மன் ஆலய விமான கோபுர கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து சுவாமி சிலைகளுக்கு பால், தயிா், சந்தனம், இளநீா், விபூதி, மஞ்சள் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. அப்போது, கிராமத்தின் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் கே. பாப்பாங்குளம், செந்தனேந்தல், சீமனேந்தல், கமுதி உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT