ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் முன்னாள் யாத்திரைப் பணியாளா்தூக்கிட்டுத் தற்கொலை

10th Jun 2022 12:03 AM

ADVERTISEMENT

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் உடல் நலக்குறைவால் மனமுடைந்த முன்னாள் யாத்திரைப் பணியாளா் புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

ராமேசுவரம் ஈஸ்வரி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் நாகசுந்தரம் (53). இவா், ராமநாதசுவாமி கோயிலில் யாத்திரைப் பணியாளராக இருந்த போது உடல் நிலை பாதிக்கப்பட்டது. மேலும் குடிப்பழக்கமும் ஏற்பட்டது. இந்நிலையில், புதன்கிழமை வீட்டின் அறையில் அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி பாண்டிச்செல்வி, நகா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT