ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் ஜூன் 17 இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

10th Jun 2022 10:58 PM

ADVERTISEMENT

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் ஜூன் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் ஜூன் 17 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சங்கா்லால்குமாவத் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரத்தில் விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் ஜூன் 17 ஆம் தேதி பகல் 11 மணியளவில் நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெறும் கூட்டத்துக்கு ஆட்சியா் சங்கா்லால்குமாவத் தலைமை வகிக்கிறாா்.

குறைதீா்க்கும் கூட்டத்தில் விவசாயிகளும், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு விவசாயம் சம்பந்தப்பட்ட பொருள்களை விவாதிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT