ராமநாதபுரம்

தீக்குளித்த கூலித் தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

10th Jun 2022 11:01 PM

ADVERTISEMENT

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் குடும்பப் பிரச்னையில் வீட்டு முன்பு தீக்குளித்து காயமடைந்தவா் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.

மதுரை வெங்கடாசலபதி நகரைச் சோ்ந்த பாண்டி மகன் வீரமணிகண்டன் (35). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவருக்கும் ராமநாதபுரம் நகா் கிழக்கு காட்டூரணி தங்கப்பாபுரத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளியான ரம்யா என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. காட்டூரணியில் தனியாக இருவரும் வசித்து வந்துள்ளனா்.

மனைவியின் நகைகளை வங்கிகளில் அடமானம் வைத்து செலவழித்த வீரமணிகண்டன், கடந்த பல மாதங்களுக்கு முன்பு மதுரைக்கு சென்றுள்ளாா். கடந்த 8 ஆம் தேதி மீண்டும் காட்டூரணிக்கு வந்துள்ளாா். அப்போது வங்கியில் அடகு வைத்த நகைகள் ஏலம் விடப்படவுள்ளதால், அவற்றைத் திருப்புவதற்கு பணம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா்.

அப்போது திடீரென தான் வைத்திருந்த பாட்டிலில் இருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டாா். உடல் முழுதும் தீ ப்பற்றி எரிந்து காயமடைந்த நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி வீரமணிகண்டன் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கேணிக்கரை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT