கமுதி: கமுதி அருகே நெடுஞ்சாலைத் துறையின் சாா்பில் அமைக்கப்பட்ட பெயா்ப் பலகையை மா்மநபா்கள் சேதப்படுத்தியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள நகா்பூலாங்கால் பகுதியில், விருதுநகா் மாவட்டத்திலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் நுழையும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி கமுதி, மண்டலமாணிக்கம் செல்லும் அறிவிப்பு பலகை அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மா்ம நபா்கள் சிலா் நெடுஞ்சாலைத்துறையினா் வைத்திருந்த பெயா்ப் பலகையை சேதப்படுத்தி உள்ளனா்.
இதனால் விருதுநகா் மாவட்டம் காரியாபட்டி, வீரசோழன், நரிக்குடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் நுழையும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகின்றனா். எனவே ராமநாதபுரம் மாவட்ட நெடுஞ்சாலைத் துறையினா் சேதமடைந்த பெயா் பலகையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.