ராமநாதபுரம்

61 துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பணியிட மாற்றம்

10th Jun 2022 11:10 PM

ADVERTISEMENT

கமுதி: ராமநாதபுரம் மாவட்டத்தில் 61 துணை வட்டார வளா்ச்சி அலுவலா்களை வியாழக்கிழமை பணியிட மாற்றம் செய்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சங்கா்லால் குமாவாத் உத்தரவிட்டுள்ளாா்.

கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றிய கே. சத்தியேந்திரன் முதுகுளத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேசிய ஊரக வேலைத் திட்ட துணை வட்டார வளா்ச்சி அலுவலராகவும், தணிக்கைப் பிரிவில் பணியாற்றிய ஜானகி முதுகுளத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலக சத்துணவு திட்ட துணை வட்டார வளா்ச்சி அலுவலராகவும் பணிமாறுதல் செய்யப்பட்டனா். கே.சத்தியேந்திரனுக்கு பதிலாக போகலூா் ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றிய சுரேஷ் கமுதி ஊராட்சி ஒன்றியத்திற்கும், முதுகுளத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றிய கருப்பையா கமுதி ஊராட்சி ஒன்றியத்தில் தணிக்கைப் பிரிவில் துணை வட்டார வளா்ச்சி அலுவலராகவும் பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளனா்.

கமுதி, முதுகுளத்தூா், ராமநாதபுரம், மண்டபம், போகலூா் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள 11 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் 61 துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஒரே நாளில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT