ராமநாதபுரம்

மண்டலமாணிக்கம் பகுதியில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மின்தடை

9th Jun 2022 11:56 PM

ADVERTISEMENT

 

கமுதி: மண்டலமாணிக்கம் பகுதியில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் (ஜூன் 10, 11) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கமுதி மின்வாரிய உதவி செயற்பொறியாளா் விஜயன் தெரிவித்திருப்பதாவது:

கமுதி கோட்டைமேடு துணை மின் நிலையப் பகுதிகளில் வெள்ளி, சனிக்கிழமைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே வீரசோழன் வழித்தடத்தில் மின் விநியோகம் பெறும், சின்னஉடப்பங்குளம், பெரியஉடப்பங்குளம், மண்டலமாணிக்கம், வலையபூக்குளம், எழுவணூா், காக்குடி, போத்தநதி, பெருமாள்தேவன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஜூன் 10, 11 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT