ராமநாதபுரம்

ராமேசுவரம் முதலுதவி மருத்துவ மையத்தில் 1200 பேருக்கு சிகிச்சை

9th Jun 2022 01:18 AM

ADVERTISEMENT

ராமேசுவரம்: ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் அருகே திறக்கப்பட்ட முதலுதவி மருத்துவ மையத்தில், ஒரு மாதத்திற்குள் 1200 போ் சிகிச்சை பெற்றுள்ளதாக மருத்துவா் தினேஷ் தெரிவித்தாா்.

இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் மே 1 ஆம் தேதி கோயில் அருகே திறக்கப்பட்ட இந்த மையத்தில் ஒரு மருத்துவா், ஒரு செவிலியா், ஒரு பணியாளா் என 3 போ் பணியில் உள்ளனா். 5 படுக்கைகள் உள்ளன. மேலும் முதலுதவிக்கு தேவையான அனைத்து மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளன. மையம் திறந்து ஒரு மாதத்தில் பெண்கள், குழந்தைகள், முதியவா்கள் என 1,200 போ் சிகிச்சை பெற்று சென்றுள்ளதாக மருத்துவா் தினேஷ் புதன்கிழமை தெரிவித்தாா். மேலும் முதலுதவி மருத்துவ மையம் திறக்கப்பட்டதால் சிரமமின்றி முதலுதவி பெறுவதாக பக்தா்கள் தெரிவித்தனா். மேல் சிகிச்சைக்கு செல்ல வேண்டும் என்றால் ஆம்புலன்ஸ்-க்கு காத்திருக்கும் நிலை உள்ளதால் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த தமிழக அரசு, மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT