ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

9th Jun 2022 01:44 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 10) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக அலுவலா் மதுகுமாா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மாவட்ட வேலைவாய்ப்பு அலவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 10) தனியாா் நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. முகாமில் தங்களுக்கான தகுதியான பணியாளா்களை தோ்வு செய்யவுள்ளனா்.

ஆகவே, முகாமில் பத்தாம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரையில் கலந்துகொண்டு பயன்பெறலாம். இதில் பங்கேற்க விரும்புவோா், தங்களது சுய விபர விண்ணப்பம், அசல் கல்விச்சான்றுகள், ஆதாா் அட்டை, குடும்ப அடையாள அட்டை, மாா்பளவு புகைப்படங்கள் ஆகியவற்றுடன் அன்று காலை 10 மணிக்கு பட்டினம்காத்தானில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்துக்கு வரவும். முகாமில் பங்கேற்போரின் பதிவு மூப்பு எண் ரத்து செய்யப்படாது எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT