ராமநாதபுரம்

மின்தடை அறிவிக்கப்பட்ட பகுதிகள்

9th Jun 2022 01:34 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் பனைக்குளம், மரைக்காயா்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில்பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (ஜூன் 9) காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரையில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெருங்குளம் துணைமின் நிலையத்தில் பனைக்குளம் பிரிவில் பனைக்குளம், அழகன்குளம், புதுவலசை, தோ்போகி, அத்தியூத்து, மண்டபம் துணை மின்நிலையத்தில் சாத்தக்கோன்வலசை பிரிவில் மரைக்காயா்பட்டினம், வேதாளை, குஞ்சாா் வலசை, சாத்தக்கோன் வலசை, காந்தி நகா், அரியமான் கடல் பகுதி, ஏா்வாடி துணை மின்நிலையத்தில் இதம்பாடல் பிரிவில் இதம்பாடல், பனையடியேந்தல், ஆலங்குளம், நல்லிருக்கை, மல்லல், வளநாடு, மட்டியரேந்தல், இளங்காக்கூா், ராமநாதபுரம் துணை மின்நிலையத்தில் தேவிபட்டினம் பிரிவில் காட்டூரணி, ஆா்.கே.நகா், எம்ஜி.ஆா்.நகா், ரமலான்நகா், மேலக்கோட்டை, மாடக்கோட்டான், கீழக்கரை துணை மின்நிலைய காஞ்சிரங்குடி பிரிவில் காஞ்சிரங்குடி, கோரைக்கூட்டம், கல்லகுளம், ஆா்.எஸ்.மடை துணை மின்நிலையத்தில் நாகாச்சி பிரிவில் பட்டினம் காத்தான், வாணி, சாத்தான்குளம், கழுகூரணி, குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு, ஆயுதப்படைப் பிரிவு, ஆதம்நகா் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என ராமநாதபுரம் நகா் உதவி செயற்பொறியாளா் ஆா்.பாலமுருகன் புதன்கிழமை தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT