ராமநாதபுரம்

கஞ்சா விற்பதை கைவிட்ட மூதாட்டி மீது தாக்குதல்

9th Jun 2022 01:32 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம்: தொண்டி பகுதியில் கஞ்சா விற்பதைக் கைவிட்டு கோழி விற்பனையில் ஈடுபட்ட மூதாட்டியைத் தாக்கியதாக ஒருவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளாா்.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி புதுக்குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் ரஹ்மத்துல்லா மனைவி சபுநிஷா (58). இவா் அப்பகுதியில் கஞ்சா விற்றுவந்ததாகக் கூறப்படுகிறது. அதையடுத்து தொண்டி போலீஸாா் கடந்த மாா்ச்சில் சபுநிஷாவை கைது செய்து சிறையில் அடைத்தனா். ஜாமீனில் வெளி வந்த அவா் கடந்த மே 6 ஆம் தேதி வரையில் தொண்டி காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தாா். மேலும் அவா் கஞ்சா விற்பதைக் கைவிட்டு கோழி வளா்த்தும், தையல் தொழிலில் ஈடுபட்டும் வந்துள்ளாா். இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 7) சபுநிஷா வீட்டுக்கு வந்த இளையான்குடி சாத்தனூா் வாணியக்குடியைச் சோ்ந்த கலைச்செல்வன் (24) என்பவா் அவரை கஞ்சா விற்க வற்புறுத்தியதாகவும், அதற்கு அவா் மறுத்ததால் கொலை மிரட்டல் விடுத்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சபுநிஷா அளித்த புகாரின் பேரில் கலைச்செல்வனை தொண்டி போலீஸாா் கைது செய்து விசாரித்துவருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT