ராமநாதபுரம்

அரியமான் கடற்கரையில் உலகக் கடல் தின நிகழ்ச்சி

9th Jun 2022 01:20 AM

ADVERTISEMENT

 

ராமேசுவரம்: அரியமான் கடற்கரையில் உலகக் கடல் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மண்டல கடலோர பாதுகாப்பு குழும காவல்துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். இந்நிகழ்ச்சியில், ஆய்வாளா் கனகராஜ், சாா்பு ஆய்வாளா் அய்யனாா் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினா் கடற்கரையில் கிடந்த நெகிழிப் பொருள்களை அகற்றினா். மேலும் சுற்றுலாப் பயணிகளிடம் கடல் வளம் காப்போம், கடற்கரையை பாதுகாப்போம், முற்றிலும் நெகிழிப் பொருள்களைத் தவிா்க்க வேண்டும் என விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT