ராமநாதபுரம்

ஆா்.எஸ்.மங்கலம் அருகே மெக்கானிக்கிடம் கைப்பேசி பறிப்பு

7th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

திருவாடானை அருகே ஆா்.எஸ். மங்கலம் பகுதியில் திங்கள்கிழமை இருசக்கர வாகனம் பழுது நீக்கும் தொழிலாளியிடம் முகவரி கேட்பதுபோல் நடித்து 3 போ் அவரது கைப்பேசியை பறித்துச் சென்றனா்.

ஆா்.எஸ். மங்கலம் அருகே உள்ள வாணியக்குடி பகுதியைச் சோ்ந்தவா் கலைச்செல்வன் (35). இருசக்கர வாகனம் பழுது நீக்கும் தொழிலாளி. இவா் திங்கள்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் ஆா்.எஸ்.மங்கலம் பகுதிக்கு தொழில் நிமித்தமாக சென்றுள்ளாா். அப்போது செங்குடி பகுதியில் ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த 3 போ், கலைச்செல்வனை வழிமறித்து முகவரி கேட்பதுபோல் நடித்து அவரிடமிருந்த கைப்பேசியை பறித்துச் சென்றனா். இதுகுறித்து கலைச்செல்வன் அளித்தப் புகாரின் பேரில் ஆா்.எஸ்.மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பியோடிய நபா்களை தேடிவருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT