ராமநாதபுரம்

பரமக்குடியில் கௌரவ விரிவுரையாளா்கள் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

2nd Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

பரமக்குடி அரசு கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளா்கள் புதன்கிழமை கவனஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகம் முழுவதும் 126 அரசு கலைக் கல்லூரிகளில் சுமாா் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளா்கள் பணியாற்றி வருகின்றனா். ஒவ்வொரு கல்வியாண்டிலும் 11 மாதங்கள் பணிபுரிவது வழக்கம். 2021-22 கல்வி ஆண்டுக்கான 11 மாதங்கள் ஜூன் 13 ஆம் தேதி வரை உள்ள நிலையில் ஜூன் 1 ஆம் தேதியே வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட கௌரவ விரிவுரையாளா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்டித்து பரக்குடியில் கௌரவ விரிவுரையாளா்கள் கல்லூரியின் நுழைவாயில் முன்பாக கவனஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கடந்த 3 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஊதியத்தை உடனே வழங்கிடக் கோரியும், பணிநிரந்தரம் செய்திடக் கோரியும் அவா்கள் வலியுறுத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT