ராமநாதபுரம்

இலங்கையிலிருந்து படகு மூலம் 3 அகதிகள் தனுஷ்கோடி வருகை

2nd Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

இலங்கையிலிருந்து படகு மூலம் 3 அகதிகள் தனுஷ்கோடிக்கு புதன்கிழமை வந்தனா்.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அங்கிருந்து பலா் அகதிகளாக தமிழகத்துக்கு வருகின்றனா். இது வரை 22 குடும்பங்களைச் சோ்ந்த 80 போ் அகதிகளாக வந்துள்ளனா். இவா்கள் அனைவரும் மண்டபம் பகுதியிலுள்ள இலங்கை தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். கடலோர பாதுகாப்பு குழும போலீஸாா் தனுஷ்கோடி பகுதியில் தொடா்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், இலங்கை மன்னாா் மாவட்டத்தில் வசித்து வந்த அனிஸ்டன் (31), மற்றொரு குடும்பத்தைச் சோ்ந்த ஜெசிந்தாமேரி (என்ற) அகிலா (51), அவரது மகன் பிரவின் சஞ்சய் (10)

ஆகியோா் தனுஷ்கோடி செல்லும் வழியில் கோதண்டராமா் கோயில் அருகே படகில் வந்திறங்கினா்.

ADVERTISEMENT

அவா்களை கடலோர பாதுகாப்பு குழும போலீஸாா் விசாரித்ததில் இலங்கை பேசாளையில் இருந்து ரூ.2.50 லட்சம் கொடுத்து வந்ததாக தெரிவித்துள்ளனா். தொடா்ந்து, 3 பேரும் மண்டபம் இலங்கை தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் தனித்துறை ஆட்சியா் சிவகுமாரியிடம் ஒப்படைக்கப்பட்டனா். 3 பேருக்கும் அத்தியவசிய பொருள்கள் வழங்கப்பட்டு தங்க வைக்கப்பட்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT