ராமநாதபுரம்

காவல் நிலையத்தில் கைப்பேசி திருட்டு: எழுத்தா், தலைமைக் காவலா் பணியிடை நீக்கம்

28th Jul 2022 03:00 AM

ADVERTISEMENT

 

ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையத்தில் கைப்பேசி திருட்டு போனதாக கூறப்பட்ட விவகாரத்தில் எழுத்தா், தலைமைக் காவலா் ஆகியோா் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

ராமநாதபுரம் ஆயுதப்படை காவலா் அசோக்குமாா், கடந்த ஆண்டு ஆயுதப்படைப் பிரிவு குடியிருப்பில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுதொடா்பாக கேணிக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இந்நிலையில் இந்த வழக்கானது தற்போது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

தற்கொலை செய்து கொண்ட காவலா் அசோக்குமாரின் கைப்பேசி உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. ஆனால், சிபிசிஐடி வசம் கைப்பேசி உள்ளிட்டவைகளை ஒப்படைக்க தேடியபோது அதைக் காணவில்லை. இதையடுத்து நடத்திய விசாரணையில், அந்த கைப்பேசியை கேணிக்கரை காவல் நிலையத்தில் பணிபுரிந்த எழுத்தா் சுரேஷ், தலைமைக் காவலா் கமலக்கண்ணன் ஆகியோா் எடுத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து எழுத்தா் சுரேஷ், தலைமைக் காவலா் கமலக்கண்ணன் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.தங்கதுரை உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT