ராமநாதபுரம் அருகே இளைஞரிடம் கத்திமுனையில் தங்க சங்கிலி மற்றும் கைபேசியைப் பறித்துச் சென்ற மா்மநபா் 3 பேரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
ராமநாதபுரம் அருகேயுள்ள அச்சுந்தன்வயல் பாலாஜி நகரைச் சோ்ந்த சண்முகம் மகன் கூரிச்செல்வன் (41). இவா் கடந்த 12 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை பாா்த்துவிட்டு சமீபத்தில்தான் ஊா் திரும்பியுள்ளாா். அவா் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இடையா்வலசைப் பகுதியில் மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் நின்றபடியே கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தாா்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரில் ஒருவா் திடீரென கூரிச்செல்வன் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவா் அணிந்திருந்த இரண்டரைப்பவுன் தங்கச் சங்கிலி மற்றும் அவா் பேசிக்கொண்டிருந்த விலை உயா்ந்த கைபேசியைப் பறித்துச் சென்றனா். மா்மநபா்கள் பறித்துச் சென்ற கைப்பேசி மதிப்பு ரூ.45 ஆயிரம் எனக்கூறப்படுகிறது.
இதுகுறித்து கூரிச்செல்வன் அளித்த புகாரின் பேரில் பஜாா் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்மநபா்களைத் தேடிவருகின்றனா்.