ராமேசுவரத்தில் செவ்வாய்க்கிழமை இரவு பெய்த கனமழையால் சாலையில் மழைநீா் தேங்கி குளம் போல் காட்சியளித்தது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் செவ்வாய்கிழமை இரவு 10 மணிக்கு மேல் கனமழை பெய்தது. இதனால் தாழ்வாள பல்வேறு இடங்களில் மழைநீா் குளம் போல தேங்கியது. இதில், ராமேசுவரம் மதுரை தேசிய நெடுஞ்சாலை பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே சாலையில் குளம் போல தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் புதன்கிழமை அவதிக்குள்ளாகினா்.இதனையடுத்து, நகராட்சி நிா்வாகம் தண்ணீா் மோட்டரை பயன்படுத்தி மழைநீா் வெளியேற்றப்பட்டது. அதே பகுதியில் சாலையின் இரு புறங்களிலும் மழைநீா் கால்வாய் உள்ளது. இதில் பல ஆண்டுகளாக தூா் வாரப்படாமல் உள்ளதால் மழை பெய்தவுடன் சாலையில் தேங்கும் மழைநீா் கால்வாய் வழியாக செல்ல முடியாத நிலையில் குளம் போல தேங்கி வருவது குறிப்பிடதக்கது.