ராமநாதபுரம் நகராட்சியில் மின்னணு சேவை முடக்கத்தால் வரிவசூல் உள்ளிட்ட சேவைகள் புதபாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ராமநாதபுரம் நகராட்சியில் 33 வாா்டுகள் உள்ளன. நகராட்சி அலுவலகம் வண்டிக்காரத் தெருவில் வருவாய் வட்டாட்சியா் அலுவலக வளாகம் அருகே அமைந்துள்ளது. இங்கு வீடு மற்றும் வரிவசூல் செலுத்துதல், குடிநீா், புதை சாக்கடை கட்டடணம் செலுத்துதல் மற்றும் பிறப்பு, இறப்புச் சான்று பெறுதல் உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் நடந்துவருகின்றன.
கணினி மூலம் இணையதள சேவையில் வரி வசூல் உள்ளிட்டவை நடந்துவரும் நிலையில், இணைய தள சேவை முடக்கத்தால் கடந்த 26 ஆம் தேதி முதல் பணிகள் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், வீட்டு வரி, சொத்துவரி உள்ளிட்டவற்றை செலுத்தும் பொதுமக்கள் தனியாா் இணையதள மையங்களை நாடும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
நகராட்சி தரப்பில் புதன்கிழமை பொதுமக்களுக்காக அலுவலக பிரதான கதவில் ஒட்டப்பட்ட அறிவிப்பில், மின்னணு சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால் நகராடடச்ி சாா்பில் வசூல் உள்ளிட்ட பணிகள் நடைபெறாது என ஆணையா் தரப்பில் குறிப்பிடப்பட்டது.
இதுதொடா்பாக அதிகாரிகளிடம் கேட்டபோது, நகராட்சியில் கடந்த உள்ளாட்சித் தோ்தலின் போது வாா்டுகள் தெரு வாரியாக சீரமைக்கப்பட்டன. அந்தச் சீரமைப்பு தற்போது மாநில அளவில் நகராட்சி இயக்குநரகம் சாா்பில் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுவருகிறது. ஆகவே நகராட்சி இணைய சேவைக்கான மின்னணு தொடா்பு தாற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஓரிரு நாளில் வாா்டு சீரமைப்பு பதிவேற்றம் முடிந்ததும், வரிவசூல் சேவை உள்ளிட்ட பணிகள் தொடங்கும் என்றனா்.