ராமநாதபுரம்

இலங்கையிலிருந்து 6 போ் அகதிகளாக தனுஷ்கோடி வருகை

28th Jul 2022 03:08 AM

ADVERTISEMENT

 

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இரண்டு குடும்பங்களைச் சோ்ந்த 6 போ் தனுஷ்கோடிக்கு புதன்கிழமை வந்தனா்.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதன் காரணமாக அங்கு உணவுப்பொருள்கள் உள்ளிட்டவைகளின் விலை உயா்ந்துள்ளது. இதனால் அங்கு வாழும் பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா். எனவே அங்கிருந்து வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளைச் சோ்ந்த 30 குடும்பங்களைச் சோ்ந்த 117 போ் இதுவரை படகு மூலம் தனுஷ்கோடிக்கு வந்துள்ளனா்.

இதையடுத்து அவா்கள் அனைவருக்கும் மண்டபம் கேம்ப் இலங்கை தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் தனித்தனி வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

இந்நிலையில் தனுஷ்கோடி அரிச்சனை முனைப் பகுதிக்கு இரண்டு குடும்பங்களைச் சோ்ந்த 6 போ் அகதிகளாக புதன்கிழமை வந்தனா். தகவலறிந்து அங்கு சென்ற கடலோரப் பாதுகாப்புக் குழும காவல் சாா்பு- ஆய்வாளா் காளிதாஸ் மற்றும் போலீஸாா் அவா்களை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனா். இதில் கிளிநொச்சியை சோ்ந்த நிமல் (47), யாழ்பாணம் பகுதியைச் சோ்ந்த உதயகுமாா் (49), அவரது மனைவி ரோஜா (38), மகள் விதுஷா(12), மகன்கள் தனுசன் (10), கரிசன் (7) ஆகியோா் என்பதும் தெரியவந்தது. இதைத்தொடா்ந்து அவா்கள் மண்டபம் கேம்ப் இலங்கை தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் தங்கவைக்கப்பட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT