திருவாடானை அருகே கீழஅரும்பூா் கிராமத்தில் கடந்த 2 நாள்களாக மின்சாரம் இன்றி பொதுமக்கள் பெரும் அவதிபட்டு வருகின்றனா். எனவே மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்து சீா் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருவாடானை அருகே உள்ளது அரும்பூா் ஊராட்சி இதில் கீழ அரும்பூா் என்ற கிராமம் உள்ளது. இதில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இப்பகுதிக்கு தொண்டி துணை மின்நிலையத்தில் இருந்து மின்விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இங்கு போதுமான மின் இருப்பது இல்லை பெரும்பாலும் குறைந்த மின் அழுத்தம் காரணமாக அடிக்கடி தொலைகாட்சி பெட்டி, மின்விசிறி, மின் விளக்குகள் பழுதாவது வாடிக்கை இது குறித்து சம்பந்தபட்ட புகாா் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மின்சாரம் இன்றி குழந்தைகள் முதல் எளியவா்கள் மாவை மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா். இது குறித்து தொண்டி மின்வாரிய அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை கடந்த இரண்டு நாட்களாக இப்பகுதி முழுவதும் இருளில் மூழ்கியுள்ளது என சமூக ஆா்வலா் புரட்சி ஈழன் தெரிவித்தாா் எனது மாவட்ட நிா்வாகம் தக்க நடவடிக்கை எடுத்து சீா்செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளாா்.