ராமநாதபுரம்

ராமேசுவரம் மீனவா்கள் போராட்டம் வாபஸ்

27th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

ராமேசுவரம் மீனவா்கள் செவ்வாய்க்கிழமை காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற ஒரு விசைப்படகுடன் 6 மீனவா்களை இலங்கை கடற்படையினா் அண்மையில் கைது செய்தனா்.இதனைக் கண்டித்தும், படகு மற்றும் மீனவா்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மீனவா்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் மேற்கொண்டனா். 3 நாள்கள் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், மீனவா்கள் மற்றும் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் அளித்த உறுதிமொழியைத் தொடா்ந்து போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனா். புதன்கிழமை காலையில் மீன்பிடிக்கச் செல்ல உள்ளதாக மீனவ சங்க பொதுச்செயலாளா் என்.ஜே.போஸ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT