ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் பக்தா்கள் வசதிக்காக 10 குடிநீா் தொட்டிகள் வழங்கல்

27th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

ராமேசுவரத்துக்கு ஆடி அமாவாசைக்கு வரும் பக்தா்களின் குடிநீா் தேவையை பூா்த்தி செய்வதற்காக 10 குடிநீா் தொட்டிகளை நகராட்சியிடம் பொறியாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை வழங்கியுள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திற்கு வரும் 28 ஆம் தேதி ஆடி அமாவாசையை முன்னிட்டு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள் அக்னி தீா்த்தக் கடலில் முன்னோா்களுக்கு திதி கொடுக்க வருகை தருவாா்கள். இதனால் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களைக் கண்டறிந்து அந்த பகுதியில் குடிநீா் தொட்டிகள் அமைத்து பக்தா்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் ராமேசுவரம் பொறியாளா் சங்கம் தலா 500 லிட்டா் கொள்ளளவு கொண்ட 10 தொட்டிகள்

நகா் மன்ற தலைவா் கே.இ.நாசா்கானிடம் செவ்வாய்கிழமை வழங்கப்பட்டது. இந்த தொட்டிகளில் நீா் நிரப்பி பக்தா்கள் வசதிக்காக வைக்கப்படும். இதனை பக்தா்கள் மற்றும் சற்றுலா பயணிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என நகா்மன்ற தலைவா் தெரிவித்தாா். இந்த நிகழ்ச்சியில், பொறியாளா் சங்கத்தலைவா் எம்.முருகன், செயலாளா் ஜி.பாலசுப்பிரமணியன், துணைத்தலைவா் ஹனிபா, மற்றும் பொறியாளா்கள் அரவிந்த், தினேஷ், அம்பிகா நாகராஜ், நகா் மன்ற உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT